ரஞ்சி: தமிழகம் இன்னிங்ஸ் வெற்றி | ஜனவரி 20, 2023
சென்னை: அசாம் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் அசத்திய தமிழக அணி, இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சென்னையில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், அசாம் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் தமிழகம் 540, அசாம் 266 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், ‘பாலோ ஆன்’ பெற்ற அசாம் அணி, 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 66 ரன் எடுத்திருந்தது.
நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. சாய் கிஷோர் பந்துவீச்சில் சுபம் (33), ராகுல் (40) அவுட்டாகினர். ‘சுழல்’ வீரர் அஜித் ராம் வலையில் ரியான் (15), கேப்டன் கோகுல் சர்மா (2), சுவர்பம் (1) சிக்கினர். ரிசவ் தாஸ் (58) அரை சதம் கடந்து ஆறுதல் தந்தார். சுனில் லசித்தை (0) வெளியேற்றிய அஜித் 5வது விக்கெட்டை கைப்பற்றினார். அசாம் அணி இரண்டாவது இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது.
தமிழகம் சார்பில் அதிகபட்சமாக அஜித் ராம் 5 விக்கெட் சாய்த்தார். தமிழகத்திற்கு 7 புள்ளி கிடைத்தது.
நடப்பு ரஞ்சி ‘சீசனில்’ தமிழக அணி முதல் வெற்றி பெற்றது. இதுவரை 6 போட்டிகளில் தலா ஒரு வெற்றி, தோல்வி, 4 ‘டிரா’ என 15 புள்ளியுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. வரும் 24ல் இதே மைதானத்தில் நடக்கவுள்ள அடுத்த லீக் போட்டியில் தமிழக அணி, சவுராஷ்டிராவை சந்திக்கவுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
